உள்ளூர் செய்திகள்

காமையகவுண்டன்பட்டி ஆரம்ப சுகாதார நிலையம்

கம்பம் அருகே மருந்து தட்டுப்பாட்டால் பொதுமக்கள் அவதி

Published On 2022-11-06 05:14 GMT   |   Update On 2022-11-06 05:14 GMT
  • தொற்றுநோயால் பாதிக்கப்பட்டதால் காமயகவுண்டன்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு படையெடுத்து செல்கின்றனர்.
  • மருந்து, மாத்திரை மற்றும் குழந்தைகளுக்கு கொடுக்கப்படும் இருமல் டானிக் இருப்பு இல்லை என கூறி வருகின்றனர்.

கம்பம்:

கம்பம் பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் காய்ச்சல், தலைவலி, ஜலதோஷம் உள்ளிட்ட உபாதைகளால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். காமயகவுண்டன்பட்டி பகுதியில் உள்ள பொதுமக்கள் தொடர்ந்து தொற்றுநோயால் பாதிக்கப்பட்டதால் காமயகவுண்டன்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு படையெடுத்து செல்கின்றனர்.

ஆனால் அங்குள்ள டாக்டர்கள், மருந்து, மாத்திரை மற்றும் குழந்தைகளுக்கு கொடுக்கப்படும் இருமல் டானிக் இருப்பு இல்லை என கூறி வருகின்றனர். இதனால் அனைத்து தரப்பினரும் கடும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.

எனவே சுகாதார நிலையத்தில் மருந்து போதிய அளவு இருப்பு வைத்திருக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News