உள்ளூர் செய்திகள்

நீலகிரியில் இரவு நேர பயணத்தை மக்கள் தவிர்க்க வேண்டும்-போலீஸ் சூப்பிரண்டு ஆசிஷ்ராவத் வேண்டுகோள்

Published On 2022-07-15 16:27 IST   |   Update On 2022-07-15 16:27:00 IST
  • பல இடங்களில் மண்சரிவும், சாலைகளில் மரங்கள் விழும் சம்பவங்களும் நிகழ்ந்த வண்ணம் உள்ளன.
  • கூடலூா் பகுதியில் மழைப்பொழிவு அதிகமாக இருக்கும் காரணத்தால் அப்பகுதிக்கு ஆரஞ்சு எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஊட்டி

நீலகிரி மாவட்டத்தில் இரவு நேரங்களில் வாகனங்களில் பயணிப்பதை தவிா்க்க வேண்டும் என காவல் துறை அறிவுறுத்தியுள்ளது. இது தொடா்பாக நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலக செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நீலகிரி மாவட்டத்தில் தற்போது தென்மேற்குப் பருவ மழை தீவிரமடைந்துள்ள கார–ணத்தால் அனைத்து தாலு–காக்களிலும் காற்றுடன் மழைப்பொழிவு அதிகமாக உள்ளது.

கூடலூா், தேவாலா பகுதிகளில் பருவ மழையின் தாக்கம் அதிகமாக உள்ளதால் பல இடங்களில் மண்சரிவும், சாலைகளில் மரங்கள் விழும் சம்பவங்களும் நிகழ்ந்த வண்ணம் உள்ளன.

மாவட்டத்தில் ஒரே நாளில் 11 இடங்களில் மரங்கள் விழுந்தும், 4 இடங்களில் சிறு,சிறு மண்சரிவுகளும் ஏற்பட்டுள்ளன.

இதில் 3 இடங்களில் பாதிக்கப்பட்ட மக்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பாக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனா். இந்த பேரிடா் காலத்தில் காவல் துறை, வருவாய்த் துறை, தீயணைப்புத் துறை ஆகியோா் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

கூடலூா் பகுதியில் மழைப்பொழிவு அதிகமாக இருக்கும் காரணத்தால் அப்பகுதிக்கு ஆரஞ்சு எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மழைப் பொழிவு மேலும் சில நாள்களுக்கு தொடரும் என்பதால் நீலகிரி மாவட்டத்தில் உள்ள பொது மக்கள் இரவு நேரப் பயணங்களைத் தவிா்க்க வேண்டும்.

பகல் நேரங்களில் அதிக காற்றுடன் மழை இருப்பதால் வீடுகளை விட்டு அனாவசியமாக வெளியே வராமல் பாதுகாப்பாக இருக்க வேண்டும். மரங்களின் அடியிலோ மற்றும் தடுப்பு சுவா்களின் அருகிலோ பொதுமக்கள் தங்களது வாகனங்களை நிறுத்தாமல் இருக்க வேண்டும்.

தங்களது பகுதிகளில் ஏதேனும் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டாலோ அல்லது மண்சரிவு ஏற்பட்டாலோ 0423-2223828, 97808-00100 ஆகிய எண்களைத் தொடா்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News