உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்

போடியில் கொரோனா தொற்று அதிகரிப்பால் பொதுமக்கள் அச்சம்

Published On 2022-07-01 09:55 IST   |   Update On 2022-07-01 09:55:00 IST
  • போடியில் கொரோனா தொற்று அதிகரிப்பால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்
  • விழிப்புணர்வு ஏற்படுத்த சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

மேலசொக்கநாதபுரம்:

தமிழகம் முழுவதும் மீண்டும் கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதால் முக கவசம் அணிதல், சானிடைசர் உபயோகித்தல் போன்ற கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டு வருகிறது.

தேனி மாவட்டம் போடியில் தற்போது கொரோனா தொற்று அதிகமாக பரவி வருகிறது. கடந்த சில நாட்களில் சுமார் 5க்கும் மேற்பட்ட நபர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

தனியார் பள்ளிகள், கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கும் கொரோனா தொற்று பரவி உள்ள சூழலில் அங்கு பயின்று வரும் குழந்தைகளுக்கும் காய்ச்சல் ஏற்பட்டுள்ளதன் காரணமாக பெற்றோர்கள் அச்சமடைந்துள்ளனர். மேலும் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதில் தயக்கம் காட்டி வருகின்றனர்.

பொது இடங்களிலும் போதிய விழிப்புணர்வு இல்லாத காரணங்களால் பொதுமக்களும் முகக் கவசம் இன்றி சுற்றி வருகின்றனர். இதனால் கொரோனா பரவல் மேலும் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.

எனவே விழிப்புணர்வை ஏற்படுத்தி ஆர். டி. பி.சிஆர் சோதனையை அதிகப்படுத்தி கொரோனா பரவலை தடுப்பதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News