உள்ளூர் செய்திகள்

வீடுகள், மோட்டார் சைக்கிளில் தேசியக்கொடி ஏற்றப்பட்டது. 

வீடுகளில் தேசியக்கொடி ஏற்றி பொதுமக்கள் கொண்டாட்டம்

Published On 2022-08-14 10:23 GMT   |   Update On 2022-08-14 10:23 GMT
  • தஞ்சை ரயில் நிலையம், மாநகராட்சி அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்கள் மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கிறது.
  • இது தவிர பெரும்பாலான ஆட்டோக்கள், பஸ், லாரி உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் தேசிய கொடிகள் ஏற்றப்பட்டு மரியாதை செலுத்தி வருகின்றனர்.

தஞ்சாவூர்:

நாட்டின் 75 -வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு 13-ந் தேதியில் இருந்து 15-ந் தேதி வரை பொதுமக்கள் தங்களது வீடுகளில் தேசியக் கொடியை ஏற்றியும், காட்சிப்படுத்தியும், இதனை ஒரு இயக்கமாக நடத்த வேண்டும் என்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார்.

அதன்படி நாடு முழுவதும் பொதுமக்கள் தங்களது வீடுகளில் தேசிய கொடிகளை ஏற்றி உள்ளனர்.

தஞ்சையில் வீடுகளில் பொதுமக்கள் தேசியக்கொடியை ஏற்றி சுதந்திர தினத்தை கொண்டாடி வருகின்றனர். எங்கு பார்த்தாலும் மூவர்ண கொடி பட்டொளி வீசி பறப்பதை காண முடிந்தது. தேசியக்கொடி அலங்காரங்களால் வீடுகள் மின்னின.

இதேபோல் தஞ்சையில் உள்ள அரசு அலுவலகங்களிலும் தேசியக்கொடி ஏற்றப்பட்டு பறக்க விடப்பட்டன. தஞ்சை ரயில் நிலையம், மாநகராட்சி அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்கள் மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கிறது. இது தவிர பெரும்பாலான ஆட்டோக்கள், பஸ், லாரி உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் தேசிய கொடிகள் ஏற்றப்பட்டு மரியாதை செலுத்தி வருகின்றனர். சிறிய கடைகள் முதல் பெரிய நிறுவனங்கள் வரையிலும் தேசியக்கொடி பறக்க விடப்பட்டிருந்தது. இதே போல் தனியார் நிறுவனங்களிலும் தேசிய கொடி ஏற்றப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் தங்கள் வாகனங்களிலும் தேசிய கொடிகளை பறக்க விட்டிருந்தனர். எல்லாவற்றிற்கும் மேலாக சாலையோரம் வசிக்கும் பொது மக்களும் தாங்கள் வசிக்கும் பகுதிகளில் தேசிய கொடி ஏற்றி உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

Tags:    

Similar News