உள்ளூர் செய்திகள்

பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட காட்சி.

குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்

Published On 2023-03-23 15:09 IST   |   Update On 2023-03-23 15:09:00 IST
  • பனஞ்சாரி, சேவிவட்டம் ஆகிய பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அப்பகுதியில் கடந்த ஒரு வாரமாக சரியாக குடிநீர் கிடைக்காமல் அவதி பட்டு வந்துள்ளனர்.
  • பொது மக்கள் 50 க்கும் மேற்பட்டோர் காலி குடங்களுடன் சென்று துட்டம்பட்டி யில் இருந்து மாட்டை யாம்பட்டி செல்லும் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

தாரமங்கலம்:

தாரமங்கலம் ஊராட்சி ஒன்றியம். துட்டம்பட்டி ஊராட்சி 3-வது வார்டு பனஞ்சாரி, சேவிவட்டம் ஆகிய பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அப்பகுதியில் கடந்த ஒரு வாரமாக சரியாக குடிநீர் கிடைக்காமல் அவதி பட்டு வந்துள்ளனர். இத னால் அப்பகுதி பொது மக்கள் 50 க்கும் மேற்பட்டோர் காலி குடங்களுடன் சென்று துட்டம்பட்டி யில் இருந்து மாட்டை யாம்பட்டி செல்லும் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தாரமங்கலம் போலீசார் மற்றும் துட்டம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் லட்சுமிதுரைசாமி, ஒன்றி யக்குழு துணைத்த லைவர் சீனிவாசன், ஊராட்சி மன்ற துணைத்தலைவர் துரையன் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

அப்போது அனைத்து வீடுளுக்கும் குடிநீர் வழங்க ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் பணி நடைபெற்று வருகிறது. விரைவில் பணி முடிந்து அனைவருக்கும் குடிநீர் முறையாக வழங்க நடவ டிக்கை மேற்கொள்ளப்படும் என்று கூறியதால் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Tags:    

Similar News