உள்ளூர் செய்திகள்
பென்னாகரம் சிவன் கோவிலில் அன்னாபிஷேக விழா
- ஆலயத்தில் நேற்று இரவு அன்னாபிஷேக பூஜையை முன்னிட்டு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெற்றது.
- சிவபெருமானுக்கு 12 வகை அபிஷேகங்கள் செய்யப்பட்டது.
பென்னாகரம்,
பென்னாகரம் நகர் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ திரிபுரசுந்தரி உடனுறை த்ரியம்பிகேஸ்வரர் ஆலயத்தில் நேற்று இரவு அன்னாபிஷேக பூஜையை முன்னிட்டு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெற்றது.
சிவபெருமானுக்கு 12 வகை அபிஷேகங்கள் செய்யப்பட்டது. தொடர்ந்து அன்னாபிஷேக பூஜையும், அலங்கார பூஜையும் வெகு விமர்சையாக நடைபெற்றது. லிங்க வடிவிலான சிவபெருமான் அண்ண அலங்காரத்தில் சிறப்புற காட்சி அளித்தார்.
தொடர்ந்து அனைத்து பக்தர்களுக்கும் பிரசா தங்கள் வழங்கப்பட்டது. பென்னாகரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் சுவாமி தரிசனம் செய்து, சிவ பெருமானை வழிபட்டனர்.