உள்ளூர் செய்திகள்

டவுனில் சாலையில் சுற்றித்திரிந்த மாடுகளுக்கு அபராதம்

Published On 2023-05-17 09:02 GMT   |   Update On 2023-05-17 09:02 GMT
  • மாடுகளை பிடித்து நெல்லை தாலுகா அலுவலகத்தில் கட்டி வைத்தனர்.
  • அபராதம் செலுத்தாவிட்டால் மாடுகளை கோசாலையில் ஒப்படைப்பது என முடிவு செய்யப்பட்டது.

நெல்லை:

நெல்லை டவுன் ரத வீதிகளில் போக்குவரத்துக்கு இடையூறாக மாடுகள் சுற்றி தெரிவதாக பொதுமக்கள் புகார் கூறிவந்தனர். இது தொடர்பாக மாநகராட்சி கமிஷனர் சிவ கிருஷ்ணமூர்த்தி உடனடி நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரி களுக்கு உத்தர விட்டார்.

இதையடுத்து நகர் நல அலுவலர் டாக்டர் சரோஜா, உதவி கமிஷனர் வெங்கட்ராமன் ஆகியோரின் அறிவுறுத்தலின் பேரில் நெல்லை மண்டல சுகாதார அலுவலர் இளங்கோ தலைமையில் இன்று தூய்மை பணியாளர்கள் சாலையில் சுற்றித்திரிந்த கால்நடைகளை பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது நெல்லையப்பர் கோவில் முன்பு சுற்றி திரிந்த 3 மாடுகளை பிடித்து நெல்லை தாலுகா அலுவலகத்தில் கட்டி வைத்தனர். தொடர்ந்து இன்று மாலைக்குள் ஒவ்வொரு மாடுகளுக்கும் தலா ரூ.1000 அபராதமாக செலுத்தி பெற்று செல்லுமாறு மாட்டின் உரிமை யாளர்க ளுக்கு அறிவுறுத்தப்பட்டது. அவ்வாறு அபராதம் செலுத்தி பெற்றுக் கொள்ள தவறினால் மாடுகளை கோசாலையில் ஒப்படைப்பது என முடிவு செய்யப்பட்டது.

மாடு பிடிக்கும் பணியை மேஸ்திரி சிவக்குமார் மற்றும் தூய்மை இந்தியா திட்ட பணியாளர்கள் முத்துராஜ், சேக், உதவி மேஸ்திரி கள் அருணாச்சலம், ஆறுமுகம் மற்றும் தூய்மை பணி யாளர்கள் மேற்கொண்டார்கள்.

Tags:    

Similar News