பர்கூர் மகா மாரியம்மன் கோவில் திருவிழா
- ஞாயிற்றுக்கிழமையில் திருவிழா நடைபெறுவது வழக்கம்.
- மாவிளக்கை ஊர்வலமாக எடுத்து வந்து அம்மனுக்கு படைத்தனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் மகா மாரியம்மன் கோயில் திருவிழா நடந்தது.
இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும், தை அமாவாசைக்கு அடுத்து வரும் ஞாயிற்றுக்கிழமையில் திருவிழா நடைபெறுவது வழக்கம்.
அதன்படி நிகழாண்டில் கடந்த 27ம் தேதி பிள்ளையாருக்கு பொங்கல் வைத்து, மாவிளக்கு எடுத்து விழா தொடங்கியது. 2-ம் நாளான சனிக்கிழமை காமாட்சி அம்மன் கோயில், தர்மராஜா கோயிலில் பொங்கல் வைத்து, மாவிளக்கு எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது.
விழாவின் முக்கிய நாளான நேற்று ஸ்ரீமகா மாரியம்மன் கோயிலில் பெண்கள் பொங்கல் வைத்து வழிப்பட்டனர். அப்போது, அம்மனுக்கு நேர்த்திக்கடனாக ஆடு, கோழிகளை பலியிட்டு வேண்டுதலை நிறைவேற்றினர்.
இதனை தொடர்ந்து மாவிளக்கு ஊர்வலம் நடைபெற்றது. பெண்கள் மாவிளக்கை ஊர்வலமாக எடுத்து அம்மனுக்கு படைத்தனர்.
சிறப்பு பூஜைகளை தொடர்ந்து மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.