உள்ளூர் செய்திகள்

பள்ளி முன்பு மாணவர்களுடன் பெற்றோர் முற்றுகை போராட்டம்

Published On 2023-01-30 13:59 IST   |   Update On 2023-01-30 21:31:00 IST
பள்ளி மாணவ- மாணவிகள், அவர்களின் பெற்றோர்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் இன்று காலை பொம்மன்பட்டி பள்ளி முன்பு திரண்டனர்.

கவுந்தப்பாடி:

ஈரோடு மாவட்டம் பவானி கல்வி மாவட்ட த்துக்கு உட்பட்ட கவுந்த ப்பாடி அடுத்த பொம்மன் பட்டி பகுதியில் அரசு நடுநிலைப்பள்ளி செயல் பட்டு வருகிறது.

இந்த பள்ளியில் பொம்மன்பட்டி, சின்னா கவுண்டனூர், தென்காசி பாளையம், வடகாடு பாளை யம், அய்யம்பாளையம் பாப்பங்காட்டூர் மற்றும் சுற்றுப்பகுதிகளை சேர்ந்த 64 மாணவர்கள், 70 மாணவி கள் என சுமார் 134 மாணவ மாணவிகள் படித்து வரு கிறார்கள்.

இந்த நிலையில் பள்ளி மாணவ- மாணவிகள், அவர்களின் பெற்றோர்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் இன்று காலை பொம்மன்பட்டி பள்ளி முன்பு திரண்டனர்.

இதை தொடர்ந்து மாணவ- மாணவிகள் மற்றும் அவர்களது பெற்றோர் மற்றும் பொது மக்கள் பள்ளி முன்பு அமர்ந்து பல்வேறு கோரி க்கைகளை வலியுறுத்தி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது பற்றி தகவல் அறிந்த தும் கவுந்தப்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுபாஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அவர்க ளிடம் சமாதான பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனால் பொதுமக்கள் சமாதானத்தை ஏற்க மறுத்து தொடர்ந்து போராட்டத்தில் ஈபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

Tags:    

Similar News