உள்ளூர் செய்திகள்

விழாவில் மாநகராட்சி கமிஷனர் மற்றும் பள்ளியின் நிர்வாகிகள் பங்கேற்றனர்.


தூத்துக்குடி ஸ்பிக்நகர் பள்ளியில் பெற்றோர் தினவிழா

Published On 2022-09-05 14:59 IST   |   Update On 2022-09-05 14:59:00 IST
  • தூத்துக்குடி மாநகராட்சி கமிஷனர் சாருஸ்ரீ, அவரது கணவர் அபிஷேக் டோபார் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினர்.
  • மாணவிகள் இரு குழுக்களாகப் பிரிந்து இந்திய பண்பாட்டை நாட்டியத்தின் மூலம் வெளிப்படுத்தினர்.

தூத்துக்குடி:

தூத்துக்குடி ஸ்பிக்நகர் மேல்நிலைப் பள்ளியின் 49-வது பெற்றோர் தின விழா ராசகோபாலன் கலை யரங்கத்தில் நடைபெற்றது.

மாநகராட்சி கமிஷனர்

சிறப்பு விருந்தினர்களாக தூத்துக்குடி மாநகராட்சி கமிஷனர் சாருஸ்ரீ, அவரது கணவர் அபிஷேக் டோபார் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினர்.

விழாவில் ஸ்பிக் பள்ளித் தலைவார் ராமகிருஷ்ணன், ஸ்பிக் நகரியத்தின் முதல் பெண் அகிலா ராமகிருஷ்ணன், தலைமை நிர்வாக இயக்குனர் பாலு, பள்ளிச் செயலாளர் பிரேம்சுந்தர், தலைமை ஆசிரியர் ராதாகிருஷ்ணன் மற்றும் நிர்வாகக் குழு உறுப்பினர்கள், ஆசிரியர்கள், மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.

பண்பாடு

முன்னதாக மாணவி சக்திதேவி வரவேற்றார். பின்னர் "பரதத்திற்குப்பதில் சொல்லும் கதக்" என்னும் தலைமையில் மாணவிகள் இரு குழுக்களாகப் பிரிந்து இந்திய பண்பாட்டை நாட்டியத்தின் மூலம் வெளிப்படுத்தினர்.

தொடர்ந்து வட இந்திய கிராமிய நடனங்களை மாணவிகள் அவற்றின் நயம் மாறாமல் வெளிப்படுத்தினர். மாணவி நித்யஅஸ்வினி நன்றி கூறினார்.

Tags:    

Similar News