உள்ளூர் செய்திகள்

ஊராட்சி மன்ற தலைவர் கணவர் கொலை : 2 பேரை காவலில் எடுத்து போலீசார் விசாரணை

Published On 2023-07-12 07:27 GMT   |   Update On 2023-07-12 07:27 GMT
  • சந்திரவாணன் மற்றும் சஞ்சய் குமாரை வலைவீசி தேடி வருகின்றனர்.
  • மதியம் 1 மணி அளவில் கோர்ட்டில் ஒப்படைக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

கடலூர்:

கடலூர் தாழங்குடாவை சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர் சாந்தியின் கணவர் மதியழகன் கடந்த 27- ந்தேதி தேர்தல் முன்விரோத தகராறு மற்றும் பழிக்கு பழி சம்பவமாக பட்டப்பகலில் கடலூர் மஞ்சக்குப்பம் சண்முகம் பிள்ளை தெருவில் ஒரு கும்பல் ஓட ஓட விரட்டி வெட்டி கொலை செய்தனர்.

இது குறித்து கடலூர் புதுநகர் போலீசார் 25 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். இதில் மாசிலாமணி, பிரகலாதன், ராஜேந்திரன், ராமலிங்கம் ஆகியோர் சிதம்பரம் மற்றும் பண்ருட்டி கோர்ட்டில் சரண் அடைந்தனர். இதில் 23 பேரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் தலைமறைவாக உள்ள சந்திரவாணன் மற்றும் சஞ்சய் குமாரை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த நிலையில் கைது செய்யப்பட்ட ராஜேந்திரன் மற்றும் ராமலிங்கம் ஆகியோரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க கடலூர்2-வது மாஜிஸ்திரேட் கோர்ட்டில் புதுநகர் போலீசார் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட்டு (பொறுப்பு) வனஜா இருவரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரித்து இன்று மதியம் 1 மணி அளவில் கோர்ட்டில் ஒப்படைக்க வேண்டும் என உத்தரவிட்டார். அதன் பேரில் ராஜேந்திரன் மற்றும் ராமலிங்கத்தை போலீசார் காவலில் எடுத்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர். விசாரணை முடிந்து இன்று மதியம் 1 மணி அளவில் மீண்டும் கோர்ட்டில் ஒப்படைக்க உள்ளனர்.

Tags:    

Similar News