வள்ளியூர் புனித பாத்திமா அன்னை பேராலயத்தில் குருத்தோலை பவனி நடைபெற்றபோது எடுத்த படம்.
வள்ளியூர் புனித பாத்திமா அன்னை பேராலயத்தில் குருத்தோலை பவனி
- 40 நாட்கள் தவக்காலம் கடந்த மார்ச் மாதம் 22-ந் தேதி சாம்பல் புதன் சிறப்பு பிரார்த் தனையுடன் தொடங்கியது.
- திருப்பலி முடிவில் பங்குதந்தை ஜான்சன் தீர்த்தம் தெளித்து ஆசி வழங்கினார்.
வள்ளியூர்:
இயேசு கிறிஸ்துவின் சிலுவை பாடுகளையும், உயிர்த்தெழுதலையும் நினைவூட்டும் வகையில் கிறிஸ்தவர்கள் ஆண்டு தோறும் 40 நாட்கள் தவக்காலம் கடைபிடித்து வருகிறார்கள். இந்த நாட்களில் அவர்கள் விருந்தோம்பலை தவிர்த்து விரதம் இருந்து வருவார்கள்.
இந்த ஆண்டு 40 நாட்கள் தவக்காலம் கடந்த மார்ச் மாதம் 22-ந் தேதி சாம்பல் புதன் சிறப்பு பிரார்த் தனையுடன் தொடங்கியது. இதையொட்டி கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை, தவக்கால சிலுவை பயண நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது.
தவக்காலத்தின் இறுதி வாரம் புனித வாரமாக கடைபிடிக்கப்படுகிறது. இதன் தொடக்க நாளான இன்று ஞாயிற்றுக்கிழமை குருத்தோலை ஏந்தி ஞாயிறு பவனி நடைபெற்றது. வள்ளியூர் புனித பாத்திமா அன்னை பேராலயத்தில் தவக்கால குருத்தோலை ஞாயிறு சிறப்பு கூட்டு திருப்பலி நடைபெற்றது. முன்னதாக குருத்தோலை பவனி நடைபெற்றது.
குறித்தோலை பவனியை இன்று காலை 7 மணிக்கு வள்ளியூர் புனித பாத்திமா அன்னை பேராலய பங்குத்தந்தை ஜான்சன், மரியதாஸ் , மற்றும் உதவி பங்கு தந்தை போஸ்கோ ஆகியோர் தொடங்கி வைத்தனர். பவானியானது பாத்திமா அன்னை திருத்தலத்தில் இருந்து தொடங்கி காந்திநகர் வடக்குத்தெரு மெயின் ரோடு வழியாக சென்று காந்தி நகர் தெற்கு தெரு வழியாக மீண்டும் ஆலயம் வந்தடைந்தது. குருத்தோலை பவனில் பங்கு இறைமக்கள் மற்றும் வள்ளியூர் சுற்று வட்டார பகுதி பக்தர்கள் என ஆயிரத்து க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து சிறப்பு கூட்டுத் திருப்பலி நடைபெற்றது. திருப்பலி முடிவில் பங்குதந்தை ஜான்சன் தீர்த்தம் தெளித்து ஆசி வழங்கினார். பின்னர் பக்தர்கள் அனைவருக்கும் காலை உணவு வழங்கப் பட்டது. பின்னர் தவக்கால தியானம் நடைபெற்றது.
ஏற்பாடுகளை வள்ளியூர் பங்குத்தந்தை ஜான்சன், உதவி பங்குத்தந்தை போஸ்கோ மற்றும் பங்கு இறைமக்கள், இளைஞர்கள் மற்றும் அன்பியங்கள் ஆகியோர் செய்திருந்தனர். வருகிற 6-ந் தேதி பெரிய வியாழனும், 7-ந் தேதி இயேசு சிலுவையில் அறை யப் பட்ட புனித வெள்ளியும் கடைபிடிக்க ப்படுகிறது.
பெரிய வியாழன் அன்று பாதம் கழுவுதல் நிகழ்ச்சி, புனித வெள்ளி அன்று சிலுவை பாதை ஊர்வலமும் நடக்கிறது. வருகிற 9-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) இயேசு கிறிஸ்து உயிர்த்தெ ழுந்த ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படுகிறது.