உள்ளூர் செய்திகள்

பாலக்கோடு அரசு பள்ளியில் மாணவர்களுக்கு போதுமான கழிப்பிட வசதி இல்லை: அதிகாரி தகவல்

Published On 2023-09-24 16:17 IST   |   Update On 2023-09-24 16:17:00 IST
  • பாலக்கோடு அரசுப் பள்ளியில் கழிப்பிட வசதி இல்லை என்று முதன்மை கல்வி அலுவலர் தகவல்
  • 12 ஆம் வகுப்பு வரை 1358 மாணவர்கள் படித்து வருகின்றனர்.

 தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழ் வழி மற்றும் ஆங்கில வழி கல்வியில் 6-ம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை 1358 மாணவர்கள் படித்து வருகின்றனர்.

இந்த நிலையில் பொது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் சமூக ஆர்வ லர்களால் பள்ளியில் மாணவர்க ளுக்கு போதுமான கழிப்பிட வசதி உள்ளனவா என கேள்வி கேட்க ப்பட்டது.

இதற்கு பொது தகவல் வழங்கும் அலுவலர் மற்றும் முதன்மை கல்வி அலுவலர் அவர்களின் நேர்முக உதவியாளர் மற்றும் தலைமை ஆசிரியர் கொடுத்த தகவலின் படி பாலக்கோடு அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் போதுமான கழிப்பிட வசதி இல்லை எனவும், கழிப்பிடங்கள் கட்டிதர அரசிடம் அனு மதி கோரப்பட்டுள்ளது எனவும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தகவல் அளித்துள்ளார். இது பொது மக்கள் மற்றும் பெற்றோர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Similar News