உள்ளூர் செய்திகள்

பறவை காவடி எடுத்து பக்தர் ஒருவர் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

தண்டாயுதபாணிசாமி கோவிலில் சித்திரை திருவிழா

Published On 2023-05-10 09:46 GMT   |   Update On 2023-05-10 09:46 GMT
  • காவிரி ஆற்றில் இருந்து புனிதநீர் எடுத்து வந்து சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.
  • சுவாமிக்கு அபிஷேகம் நடைபெற்று தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

பூதலூர்:

திருக்காட்டுப்பள்ளி ஸ்ரீ தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் 37-வது ஆண்டாக சித்திரைத் திருவிழாவை தீயாடியப்பர் பஸ் நிலைய டாக்ஸி, டூரிஸ்ட் வேன், மினி வேன், ஆட்டோ உரிமையாளர்கள் தொழிலாளர்கள் இணைந்து நடத்தினார்கள்.

திருக்காட்டுப்பள்ளி காவிரி ஆற்றில் இருந்து புனித நீர் எடுத்து வந்து ஸ்ரீ தண்டாயுதபாணி சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.

ஏராளமான பக்தர்கள் காவடி எடுத்தும் நாக்கில் உடல் முழுவதும் அலகு குத்தி கொண்டு, ஆட்ட காவடி, பறவை காவடி எடுத்து திருக்காட்டுப்பள்ளி வீதிகளின் வழியாக சிறப்பு கிராமிய இசையுடன் ஊர்வலமாக வந்து தெண்டாயுதபாணி சுவாமி கோவிலை அடைந்தனர்.

அங்கு சுவாமிக்கு அபிஷேகம் நடைபெற்று தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

மாலையில் ஸ்ரீ தண்டாயுதபாணி சுவாமிக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

Tags:    

Similar News