உள்ளூர் செய்திகள்

மக்களை திருப்தியாக வைத்திருப்பதே எங்கள் நோக்கம்- புதிதாக பொறுப்பேற்ற.ஐ.ஜி.விஜயகுமார் பேச்சு

Published On 2023-01-06 15:09 IST   |   Update On 2023-01-06 15:09:00 IST
  • டி.ஐ.ஜி. விஜயகுமார் கடந்த 2009ம் ஆண்டு ஐ.பி.எஸ் தேர்ச்சி பெற்று காவல்துறை பணியில் இணைந்தார்.
  • மலர் கொத்துக்களை கொடுத்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

கோவை,

கோவை சரக டி.ஐ.ஜி.யாக பணியாற்றி வந்த முத்துசாமி பணி மாறுதல் பெற்றதைத் தொடர்ந்து, மேற்கு மண்டல காவல்துறையின் புதிய துணைத் தலைவராக சென்னை அண்ணா நகர் துணை கமிஷனராக இருந்த விஜயகுமார் நியமனம் செய்யப்பட்டார்.

அவர் இன்று ரேஸ்கோர்சில் உள்ள அலுவலகத்தில் கோப்புகளில் கையெழுத்திட்டு பொறுப்பேற்றுக ்கொண்டார். அவருக்கு காவல்துறை அதிகாரிகள் மலர் கொத்துக்களை கொடுத்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறும்போது, பொதுமக்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை கண்டறிந்து அதற்கு தீர்வு வழங்கி மக்களை திருப்பதியாக வைத்திருப்பதே எங்கள் நோக்கமாக இருக்கும் என தெரிவித்தார்.

டி.ஐ.ஜி. விஜயகுமார் கடந்த 2009ம் ஆண்டு ஐ.பி.எஸ் தேர்ச்சி பெற்று காவல்துறை பணியில் இணைந்தார். இதனைத் தொடர்ந்து காஞ்சிபுரம், கடலூர், நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் மாவட்ட கண்காணிப்பாளராக பணியாற்றியுள்ளார்.

Tags:    

Similar News