உள்ளூர் செய்திகள்

ஓ பன்னீர்செல்வம்

நீதிபதிகள் அமர்வு அளித்த தீர்ப்பால் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் உற்சாகம்

Published On 2022-06-22 23:41 GMT   |   Update On 2022-06-22 23:41 GMT
  • ஐகோர்ட் நீதிபதி தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பில் நேற்றிரவு செய்யப்பட்ட மேல் முறையீட்டில் விடிய விடிய விசாரணை நடந்தது.
  • நீதிபதிகள் அமர்வு அளித்த தீர்ப்பைக் கேட்டதும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் உற்சாகமாக கோஷமிட்டனர்.

சென்னை:

அதிமுக பொதுக்குழு கூட்டத்தை நடத்தலாம் என சென்னை உயர் நீதிமன்றம் நேற்று இரவு உத்தரவிட்டது.

இதற்கிடையே, அதிமுக பொதுக்குழுவுக்கு தடைவிதிக்க மறுத்ததை உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் மேல் முறையீடு மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனு நீதிபதி துரைசாமி, சுந்தர் மோகன் ஆகியோரைக் கொண்ட இருநபர் அமர்வில் இரவே விசாரணை நடக்கும் என தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையே, நீதிபதி துரைசாமி வசிக்கும் அண்ணாநகரில் இந்த மனு மீதான விசாரணை நள்ளிரவு 1.30 மணிக்கு தொடங்கியது. இதில் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் தரப்பு வழக்கறிஞர்கள் ஆஜராகினர்.

விடிய விடிய நடைபெற்ற விசாரணையின் முடிவில், அதிமுக பொதுக்குழுவை நடத்த அனுமதி அளித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

பொதுக்குழுவில் 23 தீர்மானங்களை மட்டுமே நிறைவேற்றலாம். மற்ற விவகாரங்கள் குறித்து விவாதிக்கலாம். ஆனால் எந்த முடிவும் எடுக்கக் கூடாது என தெரிவித்தனர்.

இந்நிலையில், நீதிபதிகள் தீர்ப்பைக் கேட்டதும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் உற்சாகமாக கோஷமிட்டனர். கிரீன்வேஸ் சாலையில் திரண்ட ஓபிஎஸ் ஆதரவாளர்கள் இனிப்புகள் வழங்கியும், பட்டாசுகள் வெடித்தும் தீர்ப்பைக் கொண்டாடி மகிழ்ந்தனர்.

Tags:    

Similar News