உள்ளூர் செய்திகள்
கோவையில் இருந்து 60 சிறப்பு பஸ்கள் இயக்கம்- மேலாண்மை இயக்குனர் தகவல்
20-ந் தேதி மற்றும் 21-ந் தேதி ஆகிய நாட்களில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
கோவை,
அரசு போக்குவரத்துக் கழக மேலாண்மை இயக்குனர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக கோவை மண்டலத்தின் சார்பில் வார இறுதி நாட்கள் மற்றும் சுபமுகூர்த்த நாட்களான நாளை(சனிக்கிழமை), 20-ந் தேதி மற்றும் 21-ந் தேதி ஆகிய நாட்களில் பொதுமக்கள் அவர்களது சொந்த ஊர்களுக்கு சென்று வர சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
கோவை மற்றும் சுற்றுப்புற ஊர்களிலிருந்து மதுரை, தேனி, திருச்சி, சேலம், ஊட்டி போன்ற ஊர்களுக்கு செல்லவும் மற்றும் சென்று மீண்டும் ஊர் திரும்பவும் ஏற்கனவே இயக்கப்பட்டு வரும் வழித்தடப் பஸ்களுடன் கூடுதலாக 60 சிறப்பு பஸ்கள் கூடுதலாக இயக்கப்பட உள்ளன. எனவே பொதுமக்கள் இதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.