உள்ளூர் செய்திகள்

தங்க ரெத்தின அங்கியில் பரமபதவாசல் வழியே பரிமளரெங்கநாதர் எழுந்தருளினார்.

பரமபதவாசல் திறப்பு; தங்க ரெத்தின அங்கியில் எழுந்தருளிய பரிமளரெங்கநாதர்

Published On 2023-01-02 14:35 IST   |   Update On 2023-01-02 14:35:00 IST
  • பெருமாள் தங்கரெத்தின அங்கியில் உள்பிரகாரத்தில் ஊர்வலமாக எழுந்தருளினார்.
  • சொர்க்கவாசல் திறக்கப்பட்டு, பெருமாள் வசந்த மண்டபத்திற்கு எழுந்தருளினார்.

தரங்கம்பாடி:

மயிலாடுதுறை, திருஇந்தளூரில் அமைந்துள்ள பரிமளரெங்கநாதர் கோவில், பெருமாள் பள்ளிகொண்ட நிலையில் அருள்புரியும் ஸ்ரீரெங்கம் உள்ளிட்ட பஞ்ச அரங்க கோவிலில் இது ஐந்தாவது கோவிலாகும். திருமங்கையாழ்வார் உள்ளிட்ட ஆழ்வார்களால் பாடல்பெற்ற 1,500 ஆண்டுகள் பழைமை வாய்ந்த இந்த கோவில், சந்திரனின் சாபம் தீர்த்ததும், 108 வைணவ திவ்ய தேசங்களில் 22வதுமான இந்த கோவிலில் ஏகாதேசியை முன்னிட்டு, இன்று அதிகாலை சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதனை முன்னிட்டு பெருமாள் தங்க ரெத்தின அங்கியில் உள் பிரகாரத்தில் ஊர்வ லமாக எழுந்தருளினார்.

அதனைத்தொடர்ந்து சிறப்பு ஆராதனைகளுக்குப்பின், பெருமாள் பாசுரங்களை பட்டாச்சாரியார்கள் பாடினர் தொடர்ந்து மகா தீபாராதனை நடைபெற்றது.

அதனை அடுத்து பரமபத வாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறக்க ப்பட்டு, பெருமாள்வசந்த மண்டபத்திற்கு எழுந்தரு ளினார். திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

இந்நிகழ்ச்சியில் நிர்வாக அலுவலர் ரம்யா, உதவி அலுவலர் விக்னேஷ், மற்றும் போலீசார்கள் அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News