உளுந்தூர்பேட்டையில் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் புதிய கிளைகள் திறப்பு
- பங்குச் சந்தைகளில் பட்டியலிட்ட பிறகு வங்கியானது அதனை நாடு முழுவதும் விரிவாக்கம் செய்யும் திட்டத்தில் வேகம் காட்டும் விதமாக தனது செயல்பாடுகளை செய்து வருகிறது.
- தூத்துக்குடியை தலைமை அலுவலகம் கொண்ட இந்த வங்கி 100 ஆண்டுகளுக்கும் மேலாக வாடிக்கையாளர் சேவையிலும் அதன் கோட்பாடுகள் மற்றும் வரை முறைகளிலும் போற்றுதலுக்குரிய சரித்திரம் படைத்து வருகிறது.
தூத்துக்குடி:
தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி ஒரு தலை சிறந்த ஷெட்யூல்டு கமர்சியல் வங்கி. பங்கு சந்தைகளில் தனது பங்கி னை பட்டியலிட்டதை அடுத்து தனது தொலை நோக்கு பார்வையாக மீண்டும் இந்தியா முழுவது மான விரிவாக்க நடவடிக் கைகளில் ஈடுபட்டு வருகிறது.
புதிய கிளைகள் திறப்பு
வங்கியானது 537 மற்றும் 538-வது கிளைகளை ஆந்திர பிரதேசம் ஸ்ரீசத்யசாய் மாவட்டம் தர்மாவரம், தமிழ்நாடு கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை ஆகிய இடங்களில் ஏ.டி.எம், சி.ஆர்.எம் வசதியுடன் வங்கியின் கிளைகளை நேற்று தொடங்கியது. தர்மாவரத்தில் 537-வது கிளையை ஜவுளி அமைச்சக மத்திய பட்டு வாரியத்தை சேர்ந்த பிரகாஷ் பட் திறந்து வைத்தார்.
உளுந்தூர்பேட்டையில் 538-வது கிளையை உளுந்தூர்பேட்டை வியா பாரிகள் சங்க தலைவர் முகமது கனி திறந்து வைத்தார். விழாவில் வங்கி யின் ஊழியர்கள், அலு வலர்கள், வாடிக்கை யாளர்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர். விழாவில் வங்கியின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி கிருஷ்ணன் பேசியதாவது:-
50 லட்சம் வாடிக்கையாளர்கள்
பங்குச் சந்தைகளில் பட்டியலிட்ட பிறகு வங்கியானது அதனை நாடு முழுவதும் விரிவாக்கம் செய்யும் திட்டத்தில் வேகம் காட்டும் விதமாக தனது செயல்பாடுகளை செய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக 537 மற்றும் 538-வது புதிய கிளைகளை ஆந்திர பிரதேசம் மற்றும் தமிழ் நாட்டில் தொடங்கி உள்ளது. மேலும் இன்னும் அதிகமான கிளைகளை இந்தியா முழுவதும் திறந்திட திட்டமிட்டிருக்கிறது.
தமிழ்நாடு மெர்க் கன்டைல் வங்கி லிமிடெட் ஒரு பெயர்பெற்ற பழைய தனியார் துறை வங்கியாகும். தூத்துக்குடியை தலைமை அலுவலகம் கொண்ட இந்த வங்கி 100 ஆண்டுகளுக்கும் மேலாக வாடிக்கையாளர் சேவையிலும் அதன் கோட்பாடுகள் மற்றும் வரை முறைகளிலும் போற்றுதலுக்குரிய சரித்திரம் படைத்து வருவ தோடு, தொடர்ந்து லாபம் ஈட்டியும் வருகிறது. இந்த வங்கியானது, இந்தியா முழுவதிலும் 17 மாநிலங்கள், 4 யூனியன் பிரதேசங்களில் 538 கிளைகள் மற்றும் 12 மண்டல அலு வகங்களை கொண்டு சுமார் 50 லட்சத்துக்கும் மேலான வாடிக்கை யாளர்களுக்கு நிறைவான சேவை ஆற்றி வருகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.