உள்ளூர் செய்திகள்

முன்னோடி சந்தையாக மாறும் ஊட்டி நகராட்சி மார்க்கெட்- ஆ.ராசா எம்.பி. பேட்டி

Published On 2023-10-04 14:30 IST   |   Update On 2023-10-04 14:30:00 IST
  • ஆ.ராசா எம்.பி.யிடம் ஊட்டி நகராட்சி மார்க்கெட் வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் கோரிக்கைகளை முன் வைத்தனர்
  • ரூ.1 கோடி மதிப்பில் எச்.பி.எப் பகுதியின் அருகில் வரவேற்பு பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.

ஊட்டி,

ஊட்டியில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட நகராட்சி தினசரி சந்தையை இடித்து புதிய கட்டிடம் கட்டபல்வேறு காரணங்களால் எதிர்ப்பு தெரிவித்து வரும் மார்க்கெட் வியாபாரிகள் கடந்த மாதம் நீலகிரி எம்.பி. ஆ.ராசாவை சந்தித்தனர்.

ஆ.ராசா எம்.பி.யிடம் ஊட்டி நகராட்சி மார்க்கெட் வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் தங்கள் கோரிக்கைகளை முன் வைத்தனர். அவர்களின் கோரிக்கைகளை கேட்ட எம்.பி. ஆ.ராசா எம்.பி. மார்க்கெட் சங்க நிர்வாகிகளிடம் விவரங்களை கேட்டறிந்து, தானே பொறுப்பேற்று தனது எம்.பி நிதியின் மூலம் தற்காலிக கடைகளை கட்டி தருவதாக உறுதி அளித்தார்.

இதை தொடர்ந்து ஊட்டி ரேஸ்கோர்ஸ் பகுதியில் மார்க்கெட் வியாபாரிகளுக்காக, எம்.பி. நிதியில்அமைக்கப்பட்டு வரும் தற்காலிக கடைகளை ராசா எம்.பி. ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, ஊட்டி நகரின் மிகத் தொன்மையான மார்க்கெட் கடைகளை புதுப்பிக்கும் வகையில்நகர்ப்புற வளர்ச்சித்துறை சார்பாக ஏறத்தாழ கார் பார்க்கிங் அமைப்பதற்கு ரூ.18 கோடியும், புதிய மார்க்கெட் கட்டுவதற்கு ரூ.18 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதற்கான பணிகள் மிக விரைவில் தொடங்கப்பட இருக்கிறது.

அதுவரை ஊட்டி ரேஸ்கோர்ஸ் பார்க்கிங் பகுதியில்ரூ .20 லட்சம் மதிப்பீட்டில் தற்காலிகமாக கடைகள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது விரைவில் ரூ.36 கோடி மதிப்பீட்டில் சிற்றுந்துகள் நிறுத்துவதற்கான இடத்துடன் கூடிய தமிழகத்திலேயே முன்னோடி மார்க்கெட்டாக ஊட்டி நகராட்சி மார்க்கெட் அமைய உள்ளது என்பதனை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஊட்டி 200-யினை கொண்டாடும் வகையில் ஊட்டி நகராட்சிக்கு ரூ.10 கோடி சிறப்பு திட்ட நிதி வழங்கி, பல்வேறு உட்கட்டமைப்பு வசதிகள் புதியதாக உருவாக்கப்பட்டும், மேம்படுத்தப்பட்டும், பல்வேறு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டது.

மேலும், ரூ.1 கோடி மதிப்பில் எச்.பி.எப் பகுதியின் அருகில் வரவேற்பு பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தின் பாரம்பரியமான தோடர் மக்களை சிறப்பிக்கும் வகையில், அவர்களின் குடில் மற்றும் உருவ சிலைகள் வைக்கப்பட்டுள்ளது. அதேபோல், நீலகிரி வனப்பகுதியில் உள்ள விலங்குகளை அங்கீகரிக்கும் வகையில் யானை சிலை மற்றும் மான் சிலைகள் வைக்கப்பட்டது

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் ஊட்டி எம்.எல்.ஏ. ஆர். கணேஷ், மாவட்ட வருவாய் அதிகாரி கீர்த்தி பிரியதர்சினி, ஊட்டி வருவாய் கோட்டாட்சியர் மகராஜ், ஊட்டி நகராட்சி தலைவர் வாணீஸ்வரி, துணை தலைவர் ரவிக்குமார், தி.மு.க. நகர செயலாளரும், கவுன்சிலருமான ஜார்ஜ், கவுன்சிலர் முஸ்தபா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News