திண்டிவனம் அருகே கார் விபத்தில் ஒருவர் பலி; 2 பேர் படுகாயம்
- திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை கார் இழந்தது.
- பலியான முத்துவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
விழுப்புரம்:
புதுக்கோட்டை மாவட்டம் ராஜகுளத்தூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் கிருஷ்ணன், முத்து. முத்துவின் உறவினர் அந்தமானில் இருந்து மருத்துவ சிகிச்சைக்காக மதுரை வருகிறார். அவரை சென்னை விமான நிலையத்தில் இருந்து அழைத்து வர டிரைவர் முத்துவை அழைத்துக் கொண்டு காரில் சென்று கொண்டிருந்தனர்.
அப்பொழுது திண்டிவனம் அடுத்த கோனேரிக்குப்பம் சித்தர் கோவில் அருகே கார் சென்றபோது, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை கார் இழந்தது. சாலையின் அருகே இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் முத்து சம்பவ இடத்திலேயே பலியானார். டிரைவர் மணி, கிருஷ்ணன் ஆகியோர் படுங்காயங்களுடன் திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த ஒலக்கூர் போலீசார் விபத்தில் பலியான முத்துவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகி்ன்றனர்.