உள்ளூர் செய்திகள்
ஆடு மேய்த்த தகராறில் ஒருவர் கைது
- இருவருக்கும் இடையே ஆடு மேய்ப்பதில் முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
- சம்பவத்தன்று ஆடு மேய்க்கும் போது ஏற்பட்ட தகராறில் வேணு சாந்தாவை தாக்கியதில் நெற்றியில் பலத்த காயம் ஏற்பட்டது.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே உள்ள முதுகம்பட்டி பகுதியை சேர்ந்தவர் பெருமாள். இவருடைய மனைவி சாந்தா (வயது50). ஆடு மேய்க்கும் தொழில் செய்து வந்தார். அதே பகுதியை சேர்ந்தவர் வேணு (52). இருவருக்கும் இடையே ஆடு மேய்ப்பதில் முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் சம்பவத்தன்று ஆடு மேய்க்கும் போது ஏற்பட்ட தகராறில் வேணு சாந்தாவை தாக்கியதில் நெற்றியில் பலத்த காயம் ஏற்பட்டது. அக்கம் பக்கத்தினர் சாந்தாவை மீட்டு பென்னாகரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இது குறித்து பென்னாகரம் போலீசார் வழக்குபதிவு செய்து வேணுவை செய்தனர்.