உள்ளூர் செய்திகள்

கடலூர் மஞ்சகுப்பம் பகுதியில் உள்ள கார்மேல் அன்னை ஆலயத்தில் குருத்தோலை ஞாயிறு முன்னிட்டு குருத்தோலை பவனி நடைபெற்றது

குருத்தோலை ஞாயிறை முன்னிட்டு கிறிஸ்தவர்கள் குருத்தோலை ஏந்தி ஊர்வலம் தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை

Published On 2023-04-02 07:17 GMT   |   Update On 2023-04-02 07:17 GMT
  • இதை நினைவுகூரும் வகையில் குருத்தோலை ஞாயிறு கடைபிடிக்கப்படுகிறது.
  • ஓசன்னா வாழ்த்து பாடல்களை பாடியபடி குருத்தோலைகளை ஏந்தியபடி நகரின் முக்கிய வீதிகள் வழியாக பவனி வந்தனர்.

கடலூர்:

ஏசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படுவதற்கு முன்பு எருசலேம் நகரு க்குள் கழுதை மேல் அமர்ந்துவரும்போது மக்கள் தங்கள் கைகளில் குருத்தோலைகளை பிடித்து வாழ்த்து பா டல்களை பாடினர். இதை நினைவுகூரும் வகையில் குருத்தோலை ஞாயிறு கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி குருத்தோ லை பவனி நடைபெறும். அதன்படி குருத்தோலை ஞாயிறான இன்று காலை கடலூர் கார்மேல் அன்னை ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. தொடர்ந்து கூட்டு திருப்பலியும் நடைபெற்றது. பின்னர் குருத் தோலைகளை ஏந்தியபடி கிறிஸ்தவர்கள் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று மீண்டும் தேவாயலத்தை வந்தடைந்தனர். இதில் ஏ ராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். இதேபோல் கடலூர் ஆற்காடுலுத்தரன் திருச்சபை மற்றும் கடலூர் செம்மண்டலம், திருதிரிப்புலியூர், முதுநகர், நெல்லிக்குப்பம் மேல்ப ட்டாம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் குருத்தோலை ஞாயிறு கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி தேவாலயத்தில் சிறப்பு பிரார்த்தனை, ஆராதனை நடந்தது. தொடர்ந்து கிறிஸ்த வர்கள் ஓசன்னா வாழ்த்து பாடல்களை பாடியபடி குருத்தோலைகளை ஏந்தியபடி நகரின் முக்கிய வீதிகள் வழியாக பவனி வந்தனர்.

Tags:    

Similar News