உள்ளூர் செய்திகள்

பர்கூரில் ராகுல்காந்தி பிறந்தநாளையொட்டி பொதுமக்களுக்கு இனிப்புகளை மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் சேகர் வழங்கிய போது எடுத்த படம். அருகில் முன்னாள் மாவட்ட தலைவர்கள் காசிலிங்கம், கிருஷ்ணமூர்த்தி, நாஞ்சில் ஜேசு மற்றும் நிர்வாகிகள் உள்ளனர்.

ராகுல்காந்தி பிறந்த நாளையொட்டி கிருஷ்ணகிரி கோவில்களில் சிறப்பு பூஜைகள்

Published On 2022-06-20 15:33 IST   |   Update On 2022-06-20 15:33:00 IST
  • கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் கொண்டாடப்பட்டது.
  • பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியின் பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி பர்கூர் வட்டார காங்கிரஸ் கட்சி சார்பில் பர்கூர் மல்லப்பாடியில் உள்ள ஸ்ரீ மகா காளியம்மன் கோவிலில் ராகுல்காந்தி நலமுடன் வாழ வேண்டியும், சோனியாகாந்தி உடல் நலம் குணமடைய வேண்டியும் சிறப்பு பூஜைகள் நடந்தன.

இதில் அம்மனுக்கு பன்னீர், குங்கும அபிஷேகம் நடந்தன. தொடர்ந்து தீபாராதனைகள் நடந்தன. தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடந்தன. பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் சேகர், முன்னாள் மாவட்ட தலைவர்கள் காசிலிங்கம், அக.கிருஷ்ணமூர்த்தி, நாஞ்சில் ஜேசு, வக்கீல் அசோகன், மாவட்ட பொதுச் செயலாளர் ஜெயசீலன், வட்டார தலைவர்கள் ஜாக்கப், நஞ்சுண்டன், நகர தலைவர் யுவராஜ், இளைஞர் காங்கிரஸ் நகர செயலாளர் ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

போச்சம்பள்ளியில் ராகுல்காந்தி பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.இதையொட்டி முருகன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடந்தன. இதற்கு வட்டார தலைவர் மின்டிரி ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட துணை தலைவர் சேகர், முன்னாள் மாவட்ட தலைவர் காசிலிங்கம், மாவட்ட பொது செயலாளர் மடத்தானூர் ஆறுமுகம், ராகுல் பேரவை சிவலிங்கம், மாவட்ட செயலாளர் நாகராஜ், போச்சம்பள்ளி முனிராஜ் மற்றும் கட்சியினர் கலந்து கொண்டனர். மாதேப்பட்டி முருகன் கோவிலில் ராகுல்காந்தி பிறந்தநாளையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தன. இதற்கு கிருஷ்ணகிரி மேற்கு வட்டார காங்கிரஸ் தலைவர் கோபால கிருஷ்ணன் தலைமை தாங்கினார். இதில் நிர்வாகிகள் கலந்து கொண்டு இனிப்புகளை வழங்கினார்கள்.

நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் சக்திவேலன், மாதேப்பட்டி அர்ச்சுணன், வட்டார தலைவர் மதியழகன், நாகராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதே போல சூரன்குட்டை ஸ்வர்ணாகர்ஷன பைரவர் கோவில், கிருஷ்ணகிரி பெரிய ஏரிக்கரை காலபைரவர் கோவில் உள்பட பல்வேறு கோவில்களில் காங்கிரஸ் கட்சியினர் சார்பில் ராகுல்காந்தி பிறந்தநாளையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தன. 

Similar News