உள்ளூர் செய்திகள்

வணிகர் சங்கங்களின் பேரமைப்பினர் மனு கொடுத்த காட்சி.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நெல்லையில் இரவிலும் கடைகள் திறக்க அனுமதி வழங்க வேண்டும்- வணிகர் சங்கங்களின் பேரமைப்பினர் கோரிக்கை

Published On 2022-10-15 09:12 GMT   |   Update On 2022-10-15 09:12 GMT
  • செல்வராஜ் தலைமையில் மாநகர துணை போலீஸ் கமிஷனர் சரவணகுமாரிடம் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.
  • 23-ந் தேதி இரவு முழுவதும் கடைகள் திறக்க அனுமதி கோரி மனு அளிக்கப்பட்டது.

நெல்லை:

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் நெல்லை வடக்கு மாவட்ட தலைவர் செல்வராஜ் தலைமையில் மாநகர துணை போலீஸ் கமிஷனர் (மேற்கு) சரவணகுமாரிடம் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.

அந்த மனுவில், 'தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, நெல்லை மாநகர பகுதிகளில் வருகிற 20, 21, 22-ந் தேதிகளில் இரவு 2 மணி வரையிலும், 23-ந் தேதி அன்று இரவு முழுவதும் கடைகள் திறந்து வணிகம் செய்ய வழக்கம் போல் இந்த ஆண்டும் அனுமதி வழங்க வேண்டும்' என்று கூறப்பட்டு உள்ளது.

இதேபோல் மேலும் சில போலீஸ் அதிகாரிகளிடமும் மனு அளிக்கப்பட்டது. அப்போது மாவட்ட செயலாளர் நயன்சிங், பொருளாளர் அசோகன், மாவட்ட கூடுதல் செயலாளர் விநாயகம், துணைத்தலைவர் ஸ்டீபன் பிரேம்குமார், தொகுதி செயலாளர் கருப்பசாமி, செய்தி தொடர்பாளர் பகவதிராஜன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News