உள்ளூர் செய்திகள்
நீலகிரி மாவட்டம் காவல்துறை சாா்பில் மனிதநேய வார விழா
- பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.
- மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடினாா்.
ஊட்டி,
நீலகிரி மாவட்ட காவல்துறை, சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு சாா்பில், மனிதநேய வார விழா பாலடாப் பகுதியில் உள்ள பழங்குடியினா் மியூசியத்தில் நடைபெற்றது. இதில் நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரபாகா் கலந்து கொண்டு ஒழுக்கம், நன்னெறி, சமுதாய அக்கறை, பிறருக்கு உதவும் மனப்பான்மை, மனிநேயம் குறித்து மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடினாா்.நிகழ்ச்சியில் போலீஸ் துணை சூப்பிரண்டுகள் யசோதா, விஜயலட்சுமி, நஞ்சநாடு ஊராட்சித் தலைவா் சசிகலா, தோடா் இனத் தலைவி வாசமல்லி, மஞ்சூா் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவகுமாா், அரசு வக்கீல் முகமது மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.