உள்ளூர் செய்திகள்

விழிப்புணர்வு பேரணி நடந்த போது எடுத்தபடம்.

அத்திமுகம் அதியமான் வேளாண்மை கல்லூரி சார்பில் தேசிய ஒற்றுமை தின விழிப்புணர்வு பேரணி

Published On 2022-11-02 15:14 IST   |   Update On 2022-11-02 15:14:00 IST
  • தேசிய ஒற்றுமை நாளை முன்னிட்டு, அத்திமுகம் கிராமத்தில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
  • இந்த நாளின் முக்கியத்துவம் குறித்து உரையாற்றி பேரணியை தொடங்கி வைத்தார்.

ஓசூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே அத்திமுகத்தில் உள்ள அதியமான் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் சார்பில், தேசிய ஒற்றுமை நாளை முன்னிட்டு, அத்திமுகம் கிராமத்தில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

கல்லூரியின் முதல்வர் ஸ்ரீதரன், இந்த நாளின் முக்கியத்துவம் குறித்து உரையாற்றி பேரணியை தொடங்கி வைத்தார். இதில், மாணவ, மாணவியர்கள் ஒற்றுமை விளக்க பலகைகளை ஏந்தி முழக்கமிட்டு சென்றவாறு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதனைத் தொடர்ந்து, கல்லூரி முதல்வர் தலைமையில், கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவியர் அனைவரும் ஒன்றிணைந்து தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி ஏற்றனர்.

Tags:    

Similar News