உள்ளூர் செய்திகள்

திட்டக்குடியில் விடுதிகளில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

திட்டக்குடியில் விடுதிகளில் அதிகாரிகள் ஆய்வு

Published On 2023-07-21 12:48 IST   |   Update On 2023-07-21 12:48:00 IST
  • அரசு மாணவியர் விடுதியில் 55 பேர், அரசு விடுதியில் 58 பேர் தங்கி படிக்கின்றனர்.
  • அடிப்படை வசதிகள் சரியாக உள்ளதா என பார்வையிட்டார்.

கடலூர்:

திட்டக்குடியில் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் அரசு மாணவியர் விடுதியில் 55 பேர், அரசு விடுதியில் 58 பேர் தங்கி படிக்கின்றனர். இந்த விடுதிகளில் மங்களூர் வட்டார மருத்துவ அலுவலர் திருமாவளவன் திடீரென ஆய்வு செய்தார். அப்போது விடுதிகளில் குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் சரியாக உள்ளதா என பார்வையிட்டார்.

மேலும் இதில் டாக்டர் ஆனந்தி, மருந்தாளுனர் சரவணன் உள்ளிட்ட மருத்துவக் குழுவினர் மாணவிகளை உடற்பரி சோதனை செய்து மருந்து, மாத்திரை வழங்கினர். விடுதியை சுற்றியுள்ள புதர்களை சுத்தம் செய்யவும், கழிவறைகளை சுத்தமாக பராமரிக்கவும் அறிவுரை வழங்கினர். ஆய்வின் போது விடுதி காப்பாளர் செல்வரா ணி, வார்டு கவுன்சிலர் சுரேந்தர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News