உள்ளூர் செய்திகள்
மளிகை கடைகளில் அதிகாரிகள் ஆய்வு
- புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என சோதனை செய்தனர்.
- புகையிலை பொருட்களை விற்பனை செய்தவர்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது.
ராயக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் கோவிந்தன் மற்றும் கெலமங்கலம் வட்டார மருத்துவ அலுவலர் ராஜேஷ்குமார் ஆகியோர் உத்தரவின்பேரில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சேகர், சுகாதார மேற்பார்வையாளர் ஏகாம்பரம் தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் ராயக்கோட்டை பகுதியில் உள்ள கடைகளில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என சோதனை செய்தனர்.
அப்போது பொது இடங்களில் புகை பிடித்தவர்களுக்கும் பள்ளி அருகே புகையிலை பொருட்களை விற்பனை செய்தவர்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது.
புகையிலை பாதிப்பு குறித்து கொப்பகரை பள்ளி மாணவ, மாணவிகள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
ஆய்வில் சுகாதார ஆய்வாளர்கள் செந்தில், இளங்கோ, தருமன், நவீன், நந்தகுமார் ஆகியோர் ஈடுபட்டனர்.