உள்ளூர் செய்திகள்

போக்குவரத்துக்கு இடையூறாக வளர்ந்துள்ள கருவேல மரங்கள்.

போக்குவரத்துக்கு இடையூறாக வளர்ந்துள்ள கருவேல மரங்களை அகற்ற வேண்டும்

Published On 2023-09-29 09:53 GMT   |   Update On 2023-09-29 09:53 GMT
  • பஸ், லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் வருவது தெரியவில்லை.
  • இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் மீது கருவேல மர முள்கள் குத்தி காயம் ஏற்படுகிறது.

பேராவூரணி:

தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் பகுதியில் கிழக்கு கடற்கரை சாலையில் புதுப்பட்டினம், மல்லிபட்டினம், மனோரா, பிள்ளையார்திடல், சேதுபாவாசத்திரம், கழுமங்குடா, காரங்குடா, மரக்காவலசை, சம்பைப ட்டினம், செந்தலை, மந்திரி பட்டினம், அண்ணாநகர், கணேசபுரம் செல்லும் சாலையில் இருபுறமும் சீமைகருவேல மரங்கள் வளர்ந்து சாலையில் உள்ள வெள்ளை கோடுகளை மறைக்கும் அளவிற்கு சாலையில் உள்ளது.

இதனால் பேருந்து, லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் வருவது தெரியவில்லை.

மேலும் கனரக வாகனங்கள் செல்லும் போது இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் சாலை ஓரத்தில் உள்ள கருவேல மரங்களில் உள்ள கிளைகளில் உள்ள முள் குத்தி காயம் ஏற்படுகிறது.எனவே மேலும் விபத்துகள் ஏற்படாமல் தடுக்க உடனடியாக சாலையை மறைத்து வளர்ந்து வரும் கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என வாகன ஓட்டிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News