உள்ளூர் செய்திகள்

தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழங்கியபோது எடுத்த படம்.

திருச்செந்தூரில் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் - அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழங்கினார்

Published On 2023-03-18 12:53 IST   |   Update On 2023-03-18 12:53:00 IST
  • ஊட்டசத்து பெட்டகம் வழங்கும் நிகழ்ச்சி திருச்செந்தூர் யூனியன் அலுவலகத்தில் நடைபெற்றது.
  • அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கி 129 தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கி பேசினார்.

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் வட்டார அளவிலான பிரசவித்த தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து குறைபாடுகளை நீக்க ஊட்டச்சத்தை உறுதி செய்யும் வகையில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப்பணித் திட்டத்தில் ஊட்டசத்து பெட்டகம் வழங்கும் நிகழ்ச்சி திருச்செந்தூர் யூனியன் அலுவலகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தமிழக மீன்வளம், மீனவர் நலம் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கி 129 தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கி பேசினார்.

நிகழ்ச்சியில் திருச்செந்தூர் ஆர்.டி.ஓ. புகாரி, தாசில்தார் சாமிநாதன், நகராட்சி ஆணையர் வேலவன், வட்டார வளர்ச்சி அலுவலர் முத்துகிருஷ்ண ராஜா, மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பிரம்ம சக்தி, நகராட்சி சேர்மன் சிவ ஆனந்தி, துணை தலைவர் செங்குழி ரமேஷ், தி.மு.க. மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ராமஜெயம், அரசு வக்கீல் சாத்ராக்,முன்னாள் கவுன்சிலர் கோமதிநாயகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News