உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்

வள்ளியூரில் நாயை கடத்தியதாக நர்சு கூறிய புகாரால் பரபரப்பு

Published On 2022-06-17 09:34 GMT   |   Update On 2022-06-17 09:34 GMT
  • ஆசையாக வளர்த்த எனது நாயை மீட்டு தரவேண்டும்.
  • கால்நடைத்துறை அதிகாரிகள் அந்த நாயை பிடித்து மதுரைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

நாங்குநேரி:

வள்ளியூர் வீட்டு வசதி வாரியகுடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் அம்பிகாபதி. இவரது மகள் மனோகரி. இவர் ராதாபுரம் அரசு ஆஸ்பத்திரியில் நர்சாக பணியாற்றி வருகிறார்.இவர் இன்று வள்ளியூர் போலீசில் அளித்த புகார் மனுவில், நான் வேலைக்கு செல்லும்போது எனது வீட்டுக்கு காவலாக இருந்த எனது நாயை நேற்று மதியம் சிலர் லோடு ஆட்டோவில் கடத்தி கொண்டு சென்று விட்டனர்.

அந்த நபர்களை கண்டறிந்து நான் தட்டிக்கேட்டபோது எனக்கு கொலைமிரட்டல் விடுக்கின்றனர். எனவே நான் ஆசையாக வளர்த்த எனது நாயை மீட்டு தரவேண்டும். கடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இதற்கிடையே அந்த புகார் மனுவின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தினர். அதில், மனோகரி வளர்த்து வந்த நாய் கடந்த சில நாட்களாக அந்த தெருவில் உள்ளவர்களை கடித்துள்ளது. இதனால் அந்த நாயை பிடிக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்துள்ளனர்.

அதன்அடிப்படையில் கால்நடைத்துறை அதிகாரிகள் அந்த நாயை பிடித்து மதுரைக்கு அனுப்பி வைத்துள்ளனர். யாரும் கடத்தவில்லை என்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த பெண்ணிடம் அறிவுரை கூறி போலீசார் அனுப்பிவைத்தனர்.

Tags:    

Similar News