அதிகாரிகள் ஆக்கரமிப்பு செய்யப்பட்ட வீடுகளில் குடியிருப்பவர்களுக்கு அறிவிப்பு நோட்டீஸ் வழங்கி கையெழுத்து பெற்றதை படத்தில் காணலாம்.
ஆக்கிரமிப்பு செய்து கட்டிய வீடுகளை காலி செய்ய நோட்டீஸ்
- பாலக்கோடு பேரூராட்சியில் ஆக்கிரமிப்பு செய்து கட்டிய வீடுகளுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் கொடுக்கப்பட்டது.
- உயர்நீதி மன்ற உத்தரவு அடிப்படையில் நடவடிக்கை
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு தக்காளி மண்டி பின்புறம் உள்ள பேரூராட்சிக்குட்பட்ட இடத்தை கடந்த 20 ஆண்டுகளாக சிலர் ஆக்கிரமித்து வீடு கட்டி வசித்து தெரிகிறது. இதனை மீட்க பேரூராட்சி நிர்வாகம் முயற்சி செய்த போது ஆக்கிரமிப்பாளர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து தடை உத்தரவு பெற்றனர்.
தொடர்ந்து நடைபெற்று வந்த வழக்கில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடத்தை ஆக்கிர மிப்பாளர்கள் காலி செய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற உத்தரவிட்டது, அதனை தொடர்ந்து 15 நாட்களுக்குள் தாமதிக்காமல் வீட்டை காலி செய்து இடத்தை பேரூராட்சி வசம் ஒப்படைக்க வேண்டும், தவறினால் உயர்நீதிமன்ற உத்தரவுப்படி பேரூராட்சி நிர்வாகம் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு பேரூராட்சிக்கு சொந்தமான இடம் மீட்கப்படும் என்ற அறிவிப்பு நோட்டிஸ், பேரூராட்சி செயல் அலுவலர் டார்த்தி முன்னிலையில் பேரூராட்சி அதிகாரிகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட 7 வீடுகளிலும் குடியிருப்பவர்களுக்கு அறிவிப்பு நோட்டீஸ் வழங்கி கையெழுத்து பெற்றனர். அறிவிப்பு வீட்டு கதவிலும் ஒட்டப்பட்டது.