உள்ளூர் செய்திகள்

மேலப்பாளையம் உபமின் நிலையத்தில் ஆய்வு கூட்டம் நடந்தபோது எடுத்தபடம்.

வடகிழக்கு பருவமழை எதிரொலி- மேலப்பாளையம் உபமின் நிலையத்தில் அதிகாரி ஆய்வு

Published On 2022-11-06 09:26 GMT   |   Update On 2022-11-06 09:26 GMT
  • மேலப்பாளையம் உப மின் நிலையத்தில் நெல்லை மின் பகிர்மான வட்ட மேற்பார்வை மின் பொறியாளர் குருசாமி ஆய்வு மேற்கொண்டார்.
  • தளவாட பொருட்கள் போதிய அளவில் கையிருப்பு வைத்திட அறிவுறுத்தினார்.

நெல்லை:

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதை யொட்டி தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் நெல்லை நகர்ப்புற கோட்டத்திற்கு உட்பட்ட மேலப்பாளையம் உப மின் நிலையத்தில் இன்று காலை நெல்லை மின் பகிர்மான வட்ட மேற்பார்வை மின் பொறியாளர் குருசாமி ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது அதிக மழைப் பொழிவு மற்றும் பேரிடர் காலங்களில் பாதுகாப்பான முறையில் பணியாளர்கள் பணிபுரியவும், மின் பகிர்ந்தளித்தல் மற்றும் மின்தடங்கல் ஏற்பட்டால் உடனடியாக மாற்றுவழியில் மின்சாரம் வழங்குவதற்கான சாத்திய கூறுகளை பற்றியும் ஆலோசித்தார்.

பேரிடர் காலத்தில் தீயணைப்பு துறை மற்றும் பேரிடர் மீட்பு குழுவுடன் இணைந்து மின்தடை ஏற்பட காரணமாக இருக்கும் மரங்களை உடனடியாக அப்புறப்படுத்த ஒருங்கிணைந்து செயல்பட வேண்டிய அவசியத்தையும் எடுத்துரைத்தார். தளவாட பொருட்கள் போதிய அளவில் கையிருப்பு வைக்க அறிவுறுத்தினார்.

ஆய்வுக் கூட்டத்தில் நெல்லை நகர்ப்புற கோட்ட செயற்பொறியாளர் முத்துக்குட்டி, சந்திப்பு உபகோட உதவி செயற் பொறியாளர் தங்க முருகன், பெருமாள்புரம் பிரிவு உதவி செயற்பொறியாளர் சின்னசாமி, பழையபேட்டை உபகோட்ட உதவி செயற்பொறியாளர் (பொறுப்பு ) சங்கர், உதவி மின் பொறியாளர்கள் உப மின் நிலையம் ஜெயந்தி, அபிராமிநாதன், ரத்தினவேணி, கார்த்திகுமார், வெங்கடேஷ், இளநிலை மின் பொறியாளர் செய்யதுஅலி மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News