கோவை அருகே வடமாநில வாலிபர் தற்கொலை
- விரக்தியில் கிமாஞ்சு பிளேடால் தலையில் வெட்டி கொண்டுள்ளார்
- புகாரின் பேரில் சரவணம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை,
உத்தர பிரதேச மாநிலம் மிர்சாகூரை சேர்ந்தவர் கிமாஞ்சு (வயது 24). இவர் கோவை சின்னவேடம்பட்டியில் தனது உறவினரான ரஞ்சித் என்பவருடன் தங்கி இருந்தார். அருகிலுள்ள தனியார் ரப்பர் கம்பெனியில் வேலை செய்து வந்தார்.
இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு நிறுவனத்தின் உரிமையாளர் ரஞ்சித்தை தொடர்பு கொண்டு கிமாஞ்சு ஏன் சரிவர வேலை செய்வதில்லை என கேட்டதாக கூறப்படுகிறது. அதற்கு ரஞ்சித், கிமாஞ்சு மன அழுத்தத்தில் இருப்பதாக கூறியுள்ளார். அப்போது விரக்தியில் கிமாஞ்சு பிளேடால் தலையில் வெட்டி கொண்டுள்ளார். பின்னர் அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்து சிகிச்சை அளித்துள்ளனர்.
சம்பவத்தன்று கிமாஞ்சு வேலைக்கு செல்லாமல் அறையிலேயே இருந்துள்ளார். காலையில் வேலை முடித்து ரஞ்சித் அறைக்கு வந்துள்ளார். அப்போது கிமாஞ்சு வாழ்க்கையில் விரக்தி அடைந்து அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில் சரவணம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.