உள்ளூர் செய்திகள்

குட்கா கடத்த முயன்ற வட மாநில வாலிபர் கைது

Published On 2023-06-18 14:41 IST   |   Update On 2023-06-18 14:41:00 IST
  • 400 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
  • இதன் மதிப்பு சுமார் 5 லட்சம் என கூறப்படுகிறது.

ஓசூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அட்கோ போலீசாருக்கு வந்த ரகசிய தகவலின் பேரில், சப்-இன்ஸ்பெக்டர் சபரி வேலன் மற்றும் போலீசார், ஓசூர் அருகே குமுதே பள்ளியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்ததில் சுமார் 400 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து, போலீசார் விசாரணை நடத்தியதில், உ.பி. மாநிலத்தைச் சேர்ந்த தீபக் ஜெய்ஸ்வால் (28) என்பவர் விற்பனைக்காக பெங்களூரிலிருந்து சேலத்திற்கு காரில் குட்காவை கடத்தி வந்தது தெரிய வந்தது.

இதன் மதிப்பு சுமார் 5 லட்சம் என கூறப்படுகிறது. குட்கா பொருட்களையும், கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் போலீசார் பறிமுதல் செய்து, தீபக் ஜெய்ஸ்வாலையும் கைது செய்தனர். மேலும், காரின் மதிப்பு 10 லட்சம் இருக்கும் என போலீசார் தெரிவித்தனர்.

Tags:    

Similar News