உள்ளூர் செய்திகள்

தமிழ்நாட்டில் யாருக்கும் கொரோனா இல்லை

Published On 2023-07-17 07:25 IST   |   Update On 2023-07-17 07:25:00 IST
  • கொரோனா பாதிப்பில் இருந்து ஒருவர் குணம் அடைந்து வீடு திரும்பினார்.
  • சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 4 ஆக குறைந்துள்ளது.

சென்னை :

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு வேகமாக குறைந்து கொண்டே வருகிறது. சில நேரங்களில் தொற்று பாதிப்பு ஒற்றை இலக்கத்தில் பதிவாகி வருகிறது. சில நேரங்களில் தொற்று பாதிப்பு யாருக்கும் ஏற்படுவதில்லை.

அந்த வகையில், தமிழ்நாட்டில் நேற்று 1,412 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் யாருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை. நேற்று கொரோனா பாதிப்பில் இருந்து ஒருவர் குணம் அடைந்து வீடு திரும்பினார்.

மேலும் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 4 ஆக குறைந்துள்ளது. இதைபோல, நேற்று தமிழ்நாட்டில் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை.

மேற்கண்ட தகவல் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News