உள்ளூர் செய்திகள்

2-வது சீசனுக்கு தயாராகும் நீலகிரி சுற்றுலா பயணிகள் வரத்து அதிகரிப்பு

Published On 2023-09-04 08:57 GMT   |   Update On 2023-09-04 08:57 GMT
  • குன்னூர்-டால்பின்ஹவுஸ் சாலையில் போக்குவரத்து நெரிசல்
  • கேத்தரின் நீர்வீழ்ச்சி, அரிய வகை வனவிலங்குகளை கண்குளிர கண்டு ரசித்து வருகின்றனர்

ஊட்டி,

நீலகிரி மாவட்டத்தில் 2-வது சீசன் ஆரம்பமாக உள்ளது. இதனால் ஊட்டி மற்றும் குன்னூருக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. இதனால் குன்னூரில் இருந்து டால்பின் ஹவுஸ் செல்லும் சாலையில் தற்போது அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமானோர் ஊட்டியில் தற்போது குவிந்து வருகின்றனர். அங்கு அவர்கள் நீலகிரி மாவட்டத்தில் உள்ள பூங்காக்கள் மற்றும் சுற்றுலா தலங்களில் மகிழ்ச்சியாக பொழுதுபோக்கி வருகின்றனர்.

குறிப்பாக குன்னூர் சிம்ஸ்பூங்கா, காட்டேரி பூங்கா, டால்பின் நோஸ் உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களில் பயணிகள் வருகை அதிகரித்து உள்ளது. அங்கு அவர்கள் பூத்துக்குலுங்கும் மலர்களை கண்டு ரசித்து வருகின்றனர்.

டால்பின்நோஸ் பகுதியில் வெள்ளியை உருக்கி ஊற்றியது போல் காட்சியளிக்கும் கேத்தரின் நீர்வீழ்ச்சி, பழங்குடியினர் குடியிருப்பு, அரிய வகை வனவிலங்குகள் ஆகியவற்றை கண்குளிர கண்டு ரசித்து வருகின்றனர்.

குன்னூர், ஊட்டி ஆகிய பகுதிகளில் ஹோம் மேட் சாக்லேட்டுகள் அதிகளவில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இதனால் அங்கு கடை நடத்தி வரும் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

Tags:    

Similar News