உள்ளூர் செய்திகள்

நீலகிரி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி பொறுப்பேற்பு

Published On 2022-06-15 15:29 IST   |   Update On 2022-06-15 15:29:00 IST
நீலகிரி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

ஊட்டி:

நீலகிரி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியாக பணியாற்றி வந்த நசுருதீன், திண்டுக்கல் மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இதை தொடர்ந்து திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த தாமோதரன் என்பவர் நீலகிரி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டார்.

இதையடுத்து ஊட்டி பிங்கர்போஸ்ட்டில் உள்ள அலுவலகத்தில் தாமோதரன் முதன்மை கல்வி அதிகாரியாக பொறுப்பேற்றுக் கொண்டார். அவர் செங்கல்பட்டு மாவட்ட கல்வி அதிகாரியாக பணியாற்றி வந்தார். தற்போது பதவி உயர்வு பெற்று நீலகிரிக்கு வந்தது குறிப்பிடத்தக்கது. புதிதாக பொறுப்பேற்ற அதிகாரிக்கு அலுவலர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

முதன்மை கல்வி அதிகாரி தாமோதரன் கூறும்போது, நீலகிரி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்த நடவடிக்கைகள் மேலும் தீவிரப்படுத்தப்படும். இதேபோல் பழங்குடியின குழந்தைகளின் கல்வி முன்னேற்றத்திற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.

Tags:    

Similar News