உள்ளூர் செய்திகள்

நீலகிரி விவசாயிகள் உண்ணாவிரதம்: அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆதரவு

Published On 2023-09-19 14:23 IST   |   Update On 2023-09-19 14:23:00 IST
  • போராட்டம் 19 நாட்களாக தொடர்கிறது
  • சமுதாய தலைவர்கள் அ.தி.மு.க. நிர்வாகிகளை சால்வை அணிவித்து வரவேற்றனர்

ஊட்டி,

நீலகிரி மாவட்டத்தில் தேயிலைக்கு உரிய விலை வேண்டி அங்கு உள்ள விவசாயிகள் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களின் போராட்டம் 19 நாட்களாக தொடர்கிறது.

இந்த நிலையில் நீலகிரி போராட்டத்துக்கு அ.தி.மு.க சார்பில் மாவட்ட செயலாளர் கப்பச்சி வினோத் மற்றும் நிர்வாகிகள் ஆதரவு தெரிவித்து உள்ளனர். இதற்காக அவர்கள் கேத்தி பகுதியில் நடைபெற்ற போராட்ட களத்திற்கு நேரில் சென்றனர். அங்கு அவர்களுக்கு சமுதாய தலைவர்கள் சால்வை அணிவித்து வரவேற்றனர்.

நிகழ்ச்சியில் அமைப்பு செயலாளர் கே.ஆர்.அர்ச்சுனன், பேரவை மாவட்ட செயலாளர் சாந்திராமு, முன்னாள் அரசு வக்கீல் பாலநந்தக்குமார், கேத்தி பேரூராட்சி செயலாளர் கண்ணபிரான், தேனாடு லட்சுமணன், கேத்தி ராஜூ, வர்த்தக அணி ஜெய்ராதாகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Tags:    

Similar News