உள்ளூர் செய்திகள்
புதிய சாலையினை ஊராட்சி தலைவர் அனுராதா ரவிமுருகன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்த காட்சி.
கீழநத்தம் ஊராட்சியில் புதிதாக கட்டப்பட்ட பாலம்- சாலைகள் திறப்பு
- ரூ.5 லட்சம் செலவில் சிமெண்ட் சாலை, தரைமட்ட பாலம், படித்துறை கட்டப்பட்டுள்ளன.
- நிகழ்ச்சியில் வார்டு உறுப்பினர், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
நெல்லை:
கீழநத்தம் ஊராட்சிக்கு உட்பட்ட மேலூர் யாதவர் வடக்கு, தெற்கு தெருக்களில் ஊராட்சி பொது நிதியில் சுமார் ரூ.5 லட்சம் செலவில் சிமெண்ட் சாலை, தரைமட்ட பாலம், படித் துறை கட்டப்பட்டுள்ளன. அதன் திறப்பு விழா இன்று நடைபெற்றது.
இதில் ஊராட்சி மன்ற தலைவி அனுராதா ரவிமுருகன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு புதிய சாலை மற்றும் பாலங்களை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் வார்டு உறுப்பினர் பலவேசம் இசக்கிபாண்டி, மேலூர் தி.மு.க. கிளைச் செயலாளர் சுப்பிர மணி, அரசு ஒப்பந்த தாரர் மணி கண்டன், தீபம் கோபால், மணி, முருகேசன், ரங்கன் பண்ணையார், பரம சிவன், நம்பி, போல்ராஜ், வீர லட்சுமி மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.