உள்ளூர் செய்திகள்
செங்கோட்டை அருகே உள்ள சீவநல்லுாரில் புதிய வாக்காளா்கள் சேர்ப்பு முகாமை கிருஷ்ணமுரளி எம்.எல்.ஏ. ஆய்வு மேற்கொண்ட போது எடுத்தபடம்.
செங்கோட்டை அருகே புதிய வாக்காளா்கள் சேர்ப்பு முகாம்- கிருஷ்ணமுரளி எம்.எல்.ஏ. ஆய்வு
- கடையநல்லுார் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் புதிய வாக்காளா்கள் சேர்ப்பு முகாம் நடந்தது.
- முகாமில் புதிய வாக்காளா் சேர்ப்பு, உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடந்து வருகிறது.
செங்கோட்டை:
செங்கோட்டை ஒன்றிய பகுதியில் உள்ள சீவநல்லுாரில் கடையநல்லுார் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் புதிய வாக்காளா்கள் சேர்ப்பு முகாம் நடந்தது. முகாமை கடையநல்லுார் சட்டமன்ற உறுப்பினரும், அ.தி.மு.க. தென்காசி வடக்குமாவட்ட செயலாளருமான கிருஷ்ணமுரளி நேரில் சென்று ஆய்வு செய்தார்.
நிகழ்ச்சியில் மாவட்ட துணைச்செயலாளர் பொய்கை சோ.மாரியப்பன், மாவட்ட பொருளாளா் சண்முகையா, செங்கோட்டை ஒன்றிய செயலாளா் ஆய்க்குடி செல்லப்பன் மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் பொதுமக்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா். முகாமில் புதிய வாக்காளா் சேர்ப்பு, முகவரி மாற்றம், உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடந்து வருகிறது.