உள்ளூர் செய்திகள்

நெய்வேலி வடக்குத்து ஊராட்சி என்.ஜெ.வி நகரில் புதிய ரேஷன் கடையை திறந்து பொதுமக்களுக்கு ரேஷன் பொருட்களை சபா. ராஜேந்திரன் எம்எல்ஏ வழங்கினார்.

வடக்குத்து ஊராட்சியில் புதிய ரேஷன் கடை சபா. ராஜேந்திரன் எம்.எல்.ஏ., திறந்து வைத்தார்

Published On 2022-06-21 08:54 GMT   |   Update On 2022-06-21 08:54 GMT
  • வடக்குத்து ஊராட்சியில் புதிய ரேஷன் கடை சபா. ராஜேந்திரன் எம்.எல்.ஏ., அவர்களால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
  • ஆய்வுகூட்டத்தில்கலந்து கொள்ள கடலூருக்கு வருகைதந்தார் உணவு துறை அமைச்சர் சக்கரபாணி.

கடலூர்:

நெய்வேலி அருகே வடக்குத்து ஊராட்சி என்.ஜெ.வி நகர், மாருதி நகர், சபாபதி நகர், பவுனாம்பாள் நகர், காந்தி நகர் உள்ளிட்ட நகர் பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் ரேஷன் பொருட்களைபெறுவதற்கு அண்ணா கிராமம் ரேஷன் கடைக்கு நீண்ட தூரம் சென்று வந்தனர். இதனால் மேற்கொண்ட நகர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ.வை சந்தித்து என்.ஜெ.வி நகர் பகுதியில் புதிய ரேஷன் கடை அமைக்க கோரிக்கை வைத்தனர். ஆய்வுகூட்டத்தில்கலந்து கொள்ள கடலூருக்கு வருகைதந்த உணவு துறை அமைச்சர் சக்கரபாணி, சபா.ராஜேந்திரன் எம்.எல்.ஏ.வின் கோரிக்கையை ஏற்று என்.ஜெ.வி நகரில் புதிய ரேஷன் கடை அமைக்க உத்தரவிட்டார்.

இதனைத் தொடர்ந்து வடக்குத்து ஊராட்சி அண்ணா கிராமம் கடை பிரிக்கப்பட்டு 1050 குடும்ப அட்டை தாரர்ககு புதிய ரேஷன் கடை அமைக்கப்பட்டது. இந்த புதிய ரேஷன் கடை திறப்பு விழா நேற்று நடந்தது. சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு புதிய ரேஷன் கடையை திறந்து வைத்தார் திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில் மாவட்ட வழங்கல் அலுவலர் உதயகுமார், குடிமை பொருள் இணை இயக்குநர் ராஜேந்திரன், குறிஞ்சிப்பாடி வட்ட வழங்கல் அலுவலர் ரோகிணி ராஜ், சேராகுப்பம் கூட்டுறவு வங்கி செயலாளர் பொறுப்பு குமுதவல்லி, குறிஞ்சிப்பாடி மேற்கு ஒன்றிய செயலாளர் குணசேகரன், மாவட்ட கவுன்சிலர் மணமகிழ் சுந்தரி கருணாநிதி, வடக்குத்து ஊராட்சி மன்ற தலைவர் அஞ்சலை குப்புசாமி, துணைத்தலைவர் சடையப்பன், குறிஞ்சிப்பாடி மேற்கு ஒன்றிய பொறுப்புக் குழு உறுப்பினர் வெங்கடேசன் ஆனந்த் ஜோதி, ஏழுமலை, முன்னாள் தொமுச தலைவர்கள் சிவந்தான் செட்டி, வீர ராமச்சந்திரன். வடக்குத்து கிளை கழக செயலாளர்கள் மணிகண்டன், ராஜேந்திரன், மணிகண்ட ராஜா ராஜேந்திரன், நடராஜன் பிச்சை, அந்தோணி தாஸ், சங்கர், விஜிஆர், சந்திரசேகர், சுரேஷ், கோவிந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News