புதுப்பெண் தற்கொலை; உதவி கலெக்டர் விசாரணை
- இந்துமதிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பயனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
- இது குறித்து உதவி கலெக்டர் விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
வேப்பனபள்ளி,
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனபள்ளி அருகே உள்ள சின்னகொத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் இந்துமதி (வயது 20).
இவருக்கும் அதே கிராமத்தை சேர்ந்த விக்னேஷ் குமார் என்பவருக்கும் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு திருமணம் ஆனது.
கடந்த ஓராண்டிற்கு மேலாக தம்பதியினருக்கும் குழந்தை இல்லாமல் மன விரக்தியில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இதனால் கடந்த 20-ம் தேதி இந்துமதி வீட்டில் தனியாக இருந்தபோது எலி மருந்து சாப்பிட்டு உள்ளார்.
இதை கண்ட உறவினர்கள் இந்துமதியை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.
அங்கு இந்துமதிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பயனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருமணமான ஓராண்டிலேயே புதுப்பெண் குழந்தையில்லாத விரக்தியில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் இப்பகுதியில் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து உதவி கலெக்டர் விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.