உள்ளூர் செய்திகள்

நெல்லை புதிய பஸ்நிலையத்தில் நடைமேடையில் கிடந்த ரூ. 1 லட்சம்-டிக்கெட் பரிசோதகர் எடுத்து போலீசில் ஒப்படைத்தார்

Published On 2022-06-24 09:43 GMT   |   Update On 2022-06-24 09:43 GMT
  • பாபநாசம் நடைமேடையில் ஒரு பாலித்தீன் கவர் கிடந்தது.
  • பஸ் நிலையத்தில் கிடந்த பணத்தை போலீசில் ஒப்படைத்த டிக்கெட் பரிசோதகரின் நேர்மையை சக அதிகாரிகள், பொதுமக்கள் பாராட்டினர்.

நெல்லை:

பாளை கக்கன்நகரை சேர்ந்தவர் சண்முகசுந்தரம் (வயது 45). இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் டிக்கெட் பரிசோதகராக பணியாற்றி வருகிறார்.

ரூ. 1 லட்சம்

நேற்று இவர் நெல்லை புதிய பஸ்நிலையத்தில் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்குள்ள பாபநாசம் நடைமேடையில் ஒரு பாலித்தீன் கவர் கிடந்தது. அதனை சண்முகசுந்தரம் எடுத்து பார்த்த போது அதில் ரூ. 1 லட்சம் பணம் இருந்தது தெரியவந்தது. உடனடியாக அந்த பணத்தை அவர் மேலப்பாளையம் போலீசாரிடம் ஒப்படைத்தார். அதனை பெற்றுக் கொண்ட போலீசார் அந்த பணம் யாருக்கு சொந்தமானது? பணத்தை காணவில்லை என யாரேனும் புகார் செய்துள்ளார்களா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

பாராட்டு

இந்நிலையில் பஸ் நிலையத்தில் கிடந்த பணத்தை போலீசில் ஒப்படைத்த டிக்கெட் பரிசோதகரின் நேர்மையை சக அதிகாரிகள், பொதுமக்கள் பாராட்டினர்.

Tags:    

Similar News