உள்ளூர் செய்திகள்

டவுன் ஆர்ச் பகுதியில் உள்ள சாலைக்கு நெல்லை கண்ணன் பெயர் பலகையை மேயர் சரவணன் திறந்து வைத்தார். அருகில் மாநகராட்சி கமிஷனர் சிவ கிருஷ்ணமூர்த்தி, மண்டல தலைவர் மகேஸ்வரி, கவுன்சிலர் சந்திரசேகர் மற்றும் பலர் உள்ளனர்.

டவுன் குறுக்குத்துறை இணைப்பு சாலைக்கு நெல்லை கண்ணன் பெயர் - பெயர் பலகையை மேயர் சரவணன் திறந்து வைத்தார்

Published On 2023-08-18 10:01 GMT   |   Update On 2023-08-18 10:01 GMT
  • டவுன் குறுக்குத்துறை செல்லும் தென்வடல் சாலைக்கு நெல்லை கண்ணன் பெயர் சூட்டும் விழா மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ண மூர்த்தி தலைமையில் நடைபெற்றது.
  • பின்னர் அந்த சாலையில் மேயர், நெல்லை கண்ணன் குடும்பத்தினர் நடந்து சென்றனர்.

நெல்லை:

தமிழறிஞர் நெல்லை கண்ணன் நினைவாக நெல்லை டவுன் ஆர்ச் அருகில் உள்ள வளைவு முதல் குறுக்குத் துறை சாலையில் இணையும் தென் வடல் சாலைக்கு அவரது பெயரை சூட்ட வேண்டும் என நெல்லை மாநகராட்சியில் சிறப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டு அனைத்து உறுப்பினர்களின் ஆதரவோடு நிறை வேற்றப்பட்டது .

இதனைத் தொடர்ந்து இன்று நெல்லை கண்ணன் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு டவுன் குறுக்குத்துறை செல்லும் தென்வடல் சாலைக்கு நெல்லை கண்ணன் பெயர் சூட்டும் விழா மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ண மூர்த்தி தலைமையில் நடைபெற்றது.

இதில் மேயர் சரவணன் கலந்து கொண்டு நெல்லை கண்ணன் மகனும், எழுத்தாளரும், திரைப்பட இயக்குனருமான சுகா முன்னிலையில் நெல்லை கண்ணன் சாலை பெயர் சூட்டி, பெயர் பலகையை திறந்து வைத்தார். பின்னர் அந்த சாலையில் மேயர், நெல்லை கண்ணன் குடும்பத்தினர் நடந்து சென்றனர். பொதுமக்கள் அந்த சாலையில் நடந்து சென்று 'செல்பி' எடுத்து மகிழ்ந்தனர். இந்த நிகழ்ச்சியில் மண்டல தலைவர் மகேஸ்வரி, கவுன்சிலர் சந்திரசேகர், அருணா கார்டியா கேர் டாக்டர் அருணாசலம், தமிழ் ஆர்வலர்கள், இலக்கிய வாதிகள், பொது மக்கள் என ஏராளமான வர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News