உள்ளூர் செய்திகள்
பராமரிப்பு பணி காரணமாக நெல்லை- பிலாஸ்பூர் விரைவு ரெயில் ரத்து
- நெல்லையில் இருந்து பிலாஸ்பூருக்கு வாராந்திர விரைவு ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.
- நாக்பூர் தென்கிழக்கு ரெயில் நிலைய பகுதியில் பணிகள் நடைபெற்று வருகிறது.
நெல்லை:
நெல்லையில் இருந்து பிலாஸ்பூருக்கு வாராந்திர விரைவு ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நாக்பூர் தென்கிழக்கு ரெயில் நிலைய பகுதியில் நடைபெற்று வரும் பணி காரணமாக அந்த ரெயில் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி இன்று நெல்லையில் இருந்து கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, சேலம் வழியாக பிலாஸ்பூருக்கு இயக்கப்படும் விரைவு ரெயில் (22620) ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதே போல் மறுமார்க்க மாக பிலாஸ்பூரில் இருந்து நாளை மறுநாள் சேலம் வழியாக நெல்லைக்கு 6-ந் தேதி வந்து சேரும் விரைவு ரெயிலும் (22619) ரத்து செய்யப்படுவதாக ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.