உள்ளூர் செய்திகள்

அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா, தமிழ்மகன் உசேனுக்கு பொன்னாடை அணிவித்த காட்சி.

நெல்லை வந்த தமிழ்மகன் உசேனுக்கு அ.தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு

Update: 2022-06-30 09:41 GMT
  • அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் அவைத்தலைவராக தமிழ்மகன் உசேன் தேர்வு செய்யப்பட்டார்.
  • நெல்லையில் இருந்து தமிழ்மகன் உசேன், ஆத்தங்கரை பள்ளிவாசலுக்கு சென்று வழிபட்டார்.

நெல்லை:

சென்னையில் நடந்த அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் அவைத்தலைவராக தமிழ்மகன் உசேன் தேர்வு செய்யப்பட்டார். அவர் இன்று காலை ரெயில் மூலம் நெல்லை வந்தார். அவருக்கு ரெயில் நிலையத்தில் மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா தலைமையில் அ.தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

நிகழ்ச்சியில் அவைத்தலைவர் சுதாபரமசிவம், அவைத்தலைவர் பரணிசங்கரலிங்கம், முன்னாள் எம்.எல்.ஏ. ரெட்டியார்பட்டி நாராயணன், பகுதி செயலாளர்கள் சிந்துமுருகன், காந்திவெங்கடாசலம், திருத்து சின்னத்துைர, சக்திகுமார், நிர்வாகிகள் சீனிமுகமது சேட், அங்கப்பன், முத்துக்குட்டி பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் தமிழ்மகன் உசேன், ஆத்தங்கரை பள்ளிவாசலுக்கு சென்று வழிபட்டார்.

Tags:    

Similar News