குறைதீர்க்கும் நாள் முகாம் நடைபெற்ற போது எடுத்த படம்.
பொதுத்தேர்வு நடந்து வருவதால் சீரான மின்விநியோகம் வழங்க வேண்டும்- குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மின்பொறியாளர் உத்தரவு
- மக்கள் குறைதீர்க்கும் முகாம் தியாகராஜ நகரில் செயற் பொறியாளர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.
- மாணவ, மாணவிகளுக்கு பொது தேர்வு நடப்பதால் சீரான மின்விநியோகம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நெல்லை:
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பாக நெல்லை மின் பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட கிராமப்புற கோட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் தியாகராஜ நகரில் செயற் பொறியாளர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.
அதிகாரிகளுக்கு உத்தரவு
நெல்லை மின் பகிர்மான வட்ட மேற்பார்வை மின் பொறியாளர் குருசாமி கலந்து கொண்டு பொதுமக்கள் அளித்த புகார்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க செயற்பொறியாளர் கிராமப்புறம் ( பொறுப்பு) வெங்கடேஷ்மணிக்கும், ஏனைய அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டார்.
நிகழ்ச்சியில் கிராமப்புற கோட்டத்திற்கு உட்பட்ட அனைத்து மின் பொறியாளர்களும் கலந்து கொண்டனர்.
அப்போது கிராமப்புற கோட்ட பொறியாளர்கள் மற்றும் அதிகாரிகள் மத்தியில் நெல்லை மின் பகிர்மான வட்ட மேற்பார்வை மின் பொறியாளர் குருசாமி பேசுகையில், மாணவ, மாணவிகளுக்கு அரசு பொது தேர்வு நடப்பதால் சீரான மின்விநியோகம் வழங்குவதற்கும், இயற்கை இடர்பாடுகள் காரணமாக ஏதேனும் மின் தடங்கள் ஏற்பட்டால் உடனடியாக மாற்று வழியில் மின் விநியோகம் வழங்குவதற்கும், தவிர்க்க இயலாத சூழலில் அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என உத்தரவிட்டார்.