உள்ளூர் செய்திகள்
ஊத்தங்கரை அருகே ரூ.1,80,000 மதிப்பிலான பாடப்புத்தகங்கள் மாயம் -2 ஊழியர்கள் மீது புகார்
- புத்தகங்கள் மாயமாகிவிட்டன.
- பி.இ.ஓ. மாதம்மாள் ஊத்தங்கரை போலீசில் புகார் செய்துள்ளார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள அரசு பள்ளிகளுக்கு விநியோகம் செய்வதற்காக கடந்த 20.10.2021 அன்று 29 ஆயிரத்து 225 புத்தகங்கள் கொண்டுவரப்பட்டன. அதில் பல்வேறு அரசு பள்ளிகளுக்கு 17 ஆயிரத்து 225 புத்தகங்கள் விநியோகம் செய்யப்பட்ட நிலையில் மீதமுள்ள 12,000 புத்தகங்கள் இ.ஓ. அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில் அந்த புத்தகங்கள் மாயமாகிவிட்டன. இதுகுறித்து பி.இ.ஓ. மாதம்மாள் ஊத்தங்கரை போலீசில் புகார் செய்துள்ளார். அலுவலக ஊழியர்களான தங்கவேல், திருநாவுக்கரசு ஆகிய இருவர் மீது அந்த புகாரில் மாதம்மாள் சந்தேகம் தெரிவித்துள்ளார்.
காணாமல் போன புத்தகங்களின் மதிப்பு ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் என்று கூறப்படுகிறது. பள்ளி பாட புத்தகங்கள் மாயமான சம்பவம் கல்வித்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.